Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாணவனின் உயிரைக் காவுவாங்கிய மரம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் . இவருடைய மகன் அசோக்குமார், ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று பள்ளி சென்றவர்,  கனமழை காரணமாக நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவனது தந்தை இருசக்கர வாகனத்தில் சென்று, மகனை அழைத்துவந்தார். சகாய மாதா சர்ச் அருகில் வரும்போது, அங்கிருந்த மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் கிளைகள் இவர்கள் மீது விழுந்ததால், பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்துச்சென்றார்கள். இரவு 11 மணிக்கு மேல் மாணவன் அசோக்குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில், அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம், காரைக்குடி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜாவிடம் பேசும்போது,
''அசோக்குமார் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவன். அவனுடைய அப்பா சாதாரண கூலித் தொழிலாளி. நன்றாகப் படிக்கும் மாணவனை நாங்கள் இழந்திருக்கிறோம்'' என்றார் கண்ணீருடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close