Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டெங்கு காய்ச்சல்குறித்து தவறான தகவலை அரசு பரப்புகிறது’ - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

டெங்கு காய்ச்சல்குறித்த தவறான தகவல்களை அரசு பரப்பிவருவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 


தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘'தமிழகம் முழுவதும் 10,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக, அரசின் சுகாதாரத்துறை செயலாளரே கூறியிருக்கிறார். ஆனால், இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் தினமும் 10 பேர் டெங்கு காய்ச்சலால் இறப்பதாகவும், இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகவும் எங்களுக்கு ஆதாரபூர்வமாகத் தகவல் வந்திருக்கிறது. ஆனால், இந்தத் தகவல்களை எல்லாம் மூடி மறைத்து, தவறான தகவலை அரசு சொல்லிக்கொண்டிருக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் குப்பை, கூளங்களை முறையாகச் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் செய்யாமல் டெங்கு பாதிப்பு எந்தப் பகுதியில் இருக்கிறதோ, அந்தப் பகுதிக்கு வந்து குப்பைகளைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் பணியில் இந்த அரசு ஈடுபடவில்லை'' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close