Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை வந்த புதிய ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு!

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தடைந்தார். 

அஸ்ஸாமிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் வரவேற்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து, விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநர் மாளிகையில், நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். முன்னதாக, தமிழகப் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு, சென்னை விமான நிலையத்தில் இன்று வழியனுப்பு விழா நடைபெற்றது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close