Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழு மாதத்தில் 3,563 ஃபைல்கள்! - யாரை முந்துகிறார் எடப்பாடி பழனிசாமி?

ஃபைல்களைக் கையொப்பமிட்டு அனுப்புவதில் ஜெயலலிதாவைவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேகமாகச் செயல்படுகிறார் எனத் தலைமைச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பின், பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 25-ம் தேதி வரை, 3,563 ஃபைல்களில் கையொப்பமிட்டுள்ளார். ஏழு மாதங்களில் இது புதிய சாதனை என்று சொல்லப்படுகிறது. முதல்வரிடத்தில் உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய முக்கியத்துறைகள் உள்ளன. துறைசார்ந்த 2,071 ஃபைல்களில் அவர் கையொப்பமிட்டிருக்கிறார். அதிகபட்சமாக உள்துறையில் 714 ஃபைல்களிலும் பொதுப்பணித்துறையில் 515 ஃபைல்களிலும் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டுள்ளார். 

ஃபைல்கள் தேங்க விடாமல் ஒரே நாளில் அவற்றைக் கையொப்பமிட்டு அனுப்பிவிட வேண்டுமென அதிகாரிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாகவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைவிட எடப்பாடி பழனிசாமி வேகவேகமாக ஃபைல்களைப் பார்த்து அனுப்பிவிடுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரம், ஃபைல்களை வேகமாக கையொப்பமிட்டு அனுப்புவதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். கடைசி ஐந்து இடங்களில் போக்குவரத்துத்துறை காமராஜ், மின்வாரியத்துறை தங்கமணி, போக்குவரத்துத்துறை விஜயபாஸ்கர், தகவல் தொழில்துட்பத்துறை மணிகண்டன், உள்ளாட்சித்துறை எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உள்ளனர். துணை முதல்வராக சமீபத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இணைந்தார். எனவே, அவரது பணித்திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close