Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காவிக்கு மாறிய அரசு விழா!

முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது நடைபெறும் அரசு விழாக்களில் அவருக்குப் பிடித்த பச்சை நிறத்திலேயே அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். 


அரசு விழாக்களின்போது வைக்கப்படும் பேனர்கள், திரைச்சீலைகள், பூங்கொத்துகளில் இடம்பெற்றிருக்கும் பெரும்பான்மையான மலர்கள் என அனைத்தும் பச்சைமயமாகவே காட்சியளிக்கும். இதற்காகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகளவில் மெனக்கெடுவது வழக்கம். அ.தி.மு.க அரசுக்கும் பச்சை நிறத்துக்கும் அவ்வளவு பொருத்தம். கடந்த 6 ஆண்டுகளாக இந்த நடைமுறையே இருந்துவந்தது. 
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வமும் பச்சை வண்ணத்தையே கடைப்பிடித்து வந்தார். இதன்பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் இதே பாணியைப் பின்பற்றினார். நேற்று கரூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரை இதேநிலைதான் நீடித்தது. 

இந்தநிலையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அந்தத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தும் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

மேலும், தமிழகத்தின் அடுத்த ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு விழாவுக்காகத் தமிழக அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட உள்ள வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டும் காவி நிறப் பின்னணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு விழா நிறம் மாறிக்கொண்டிருப்பதை ஆச்சர்யத்துடன் கவனிக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close