Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று நாள்களாக மரத்தில் தவித்த பூனையை மீட்ட தீயணைப்புத்துறை!

கோவை, தலைமைத் தபால் அலுவலகத்தில் உள்ள மரத்தில் கடந்த மூன்று நாள்களாகச் சிக்கிக்கொண்டிருந்த பூனையைத் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை தலைமைத் தபால் அலுவலகத்தில் உள்ள வேப்பமரத்தில், பூனை ஒன்று கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு ஏறியது. ஆனால், மரம் உயரமாக இருப்பதால், பூனையால் கீழே இறங்க முடியவில்லை. தபால் ஊழியர்கள் சிலரும் பூனையை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் பூனையை மீட்க முடியவில்லை. 

இதையடுத்து, முன்னாள் தபால் ஊழியர் ஹரிஹரன் என்பவர் நமக்கு கொடுத்த தகவலின் பேரில் நாம் தலைமைத் தபால் அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கு இறங்க முடியாமல் பூனை தவித்து வந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தோம். இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத் தலைமை தீயணைப்புத்துறை அலுவலர் பிரதீப் குமாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ஸ்டேஷன் ஆபிஸர் அண்ணாதுரை தலைமையில் சிவகுமார், தேவராஜ், ஜெயச்சந்திரன், சிவகுமார், தங்கபாண்டி, ஶ்ரீதரன், விபின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

ஏணி, குச்சி உள்ளிட்ட உபகரணங்களுடன் அவர்கள் பூனையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பூனை சிக்கவில்லை. மரக்கிளையில் அங்கும் இங்கும் பூனை தாவியது. அரை மணி நேர முயற்சிக்குப் பிறகு பூனை மீட்கப்பட்டது. பூனையைப் பிடிப்பதற்காக, கீழே பெட்சிட்டை விரித்து தீயணைப்பு துறையினர் தயாராக இருந்தனர். ஆனால், பூனை பெட்சீட்டில் விழாமல், கீழே விழுந்து நொடிப்பொழுதில் அந்த இடத்தைவிட்டு ஓடியது. பூனையைப் பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close