Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இது எங்கள் அருவி; நாங்கள் சொல்வதுதான் சட்டம்' - சுற்றுலாப் பயணிகளை அதிரவைக்கும் கட்டணக் கொள்ளை!

குட்லாடம்பட்டி அருவி

மதுரை வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமம் மிகவும் பசுமையான இடமாக விளங்குகிறது. அங்குள்ள அருவி மிகவும் பிரபலமானது. மதுரையில் உள்ள மக்களுக்கு குட்டியான குற்றாலமாகக் காட்சியளிக்கிறது. பல வருடங்களாகப் பராமரிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் பிடியில் தவித்தது. அங்கு குடும்பத்தோடு வரும் நபர்களுக்குத் தொல்லை கொடுத்துவந்தனர் சமூக விரோதிகள். மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து அருவியில் போடுவது உள்ளிட்ட பல சமூக விரோதச் செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டுவந்தனர். இதுகுறித்து பல புகார்கள் எழுந்த பின், தற்போது வனத்துறை அந்தப் பகுதியைப் பாதுகாக்கத் தொடங்கியது. குட்லாடம்பட்டி அருவி வனத்துறையின்கீழ் சுற்றுலா மேம்பாட்டுக் குழுவோடு சேர்ந்து பாதுகாத்துவருகிறது. அங்கு குளிக்க வரும் நபர் ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கிறது. ஆனால், பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் தனியார் கான்ட்ராக்டர்கள் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.15 முதல் 100 வரை வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகப்படியான வசூல் செய்யப்படுவதாகத் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டப்படுகிறது. டிக்கெட்டில் உள்ள விலையைவிட அதிகமான வசூல் செய்கிறீர்களே ஏன் என்று கேட்டால், 'இது எங்கள் அருவி. இங்கு நாங்கள் சொல்வதுதான் சட்டம்' என்று குண்டர்கள் மிரட்டுவதக்ச் சுற்றுலாப் பயணிகள் புகார் கூறுகின்றனர் .

அருவி

 

''இந்தச் சட்ட விரோதமான செயல்கள் அரசு ஊழியர்களுக்குத் தெரிந்துதான் நடக்கிறதா இல்லை அவர்களின் ஆதரவோடுதான் நடக்கிறதா என்று தெரியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, இந்த பிரச்னைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அருவியில் குளிக்க வரும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close