Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவம்பரில் தலைமைச்செயலகம் முற்றுகை! விவசாய சங்கம் அதிரடி அறிவிப்பு

அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வில்லையென்றால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன்.

                                                     

 பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். ‘’ தமிழ் நாட்டில் விவசாயிகளின் நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. விவசாயிகளின் தரம் உயர்ந்தால்தான் நாட்டின் நிலைமை உயரும் இது ஏன் மோடி ஐயாவிற்கு தெரியவில்லை. கடந்த 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகையும்  வழங்கப்படவில்லை. உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பிறகு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதை வாபஸ் பெற வேண்டும்.

 கர்நாடக அரசு சம்பா சாகுபடிக்குக் காவிரியிலிருந்து 132டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். கடைமடையில் 14.5 லட்சம் ஏக்கர் நிலம் இதனால் பயன்பெற்று வந்தது. தற்போது தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடி அற்று போகும் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன் ஏரி பகுதிகளைத் தூர்வாருவதற்காக 330 கோடி டென்டர் விடப்பட்டும். ஆனால் இதுவரை தூர்வாரப்படவில்லை. மேலும், அரியலூர் மாவட்டத்தை முதல்வர் காப்பாற்ற வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வேண்டும். இது அமையவில்லை என்றால் சம்பா சாகுபடி அற்று போகும். காவிரியில் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 10 ஆயிரம் கன அடிதான் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு கர்நாடகத்திலிருந்து தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை முறையாகவும் முழுமையாகவும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சென்னைத் தலைமைச் செயலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close