Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பணி உபகரணங்களே வழங்கப்படுவதில்லை’ - டெங்கு விழிப்பு உணர்வு தின சோகம்

டெங்குக் காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே, டெங்குக் காய்ச்சல் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை டெங்கு விழிப்பு உணர்வு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

கோவை

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அரசு அலுவலகங்களில் டெங்கு விழிப்பு உணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் டெங்கு விழிப்பு உணர்வு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், டெங்குக் காய்ச்சல் விழிப்பு உணர்வு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

பின்னர், துப்புரவுப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

கோவை மாநகராட்சி மட்டுமல்லாது இருகூர், மதுக்கரை போன்ற புறநகர்ப் பகுதிகளில் இருந்தும் துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு நடத்தும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துப்புரவுப் பணியாளர்களுக்கு, பணி உபகரணங்களே வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டவர்களில் ஏராளமானோர் க்ளவுஸ், மாஸ்க் இல்லாமல்தான் பணிசெய்தனர். 

துப்புரவுப் பணியாளர்கள்

இதுகுறித்து துப்புரவுப் பணியாளர்கள் சிலரிடம் கேட்டோம், 'எங்களுக்கு வழங்கப்படும் க்ளவுஸ் ரப்பரால் தயாரிக்கப்படுகிறது. இதனால், அது விரைவில் கிழிந்துவிடும். புதிய க்ளவுஸ்களை வழங்குவதில்லை. அதேபோல, துடைப்பம், குப்பைக் கூடை உள்ளிட்ட உபகரணங்களை எங்களது சொந்தச் செலவில் வாங்கித்தான் பணி செய்துகொண்டிருக்கிறோம்' என்றனர்.
எனினும், சில துப்புரவுப் பணியாளர்கள், ’அப்படியெல்லாம் இல்ல. எல்லாம் சரியாத்தான் கொடுத்துட்டு இருக்காங்க’ என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close