Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழை வேண்டி மானாவாரி விவசாயிகள் மழைக்கஞ்சி வழிபாடு

தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் கிராமத்து விவசாயிகள், மழை பெய்ய வேண்டி கஞ்சி காய்ச்சி வழிபாடு நடத்தினர்.

mazai kanji vazipadu

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தார் ஆகிய வட்டங்களில் முழுமையாகவும், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் பகுதி நிலங்களும் மானாவாரி நிலங்கள். இந்த நிலங்களில், மானாவாரிப் பயிர்களான பாசி, கம்பு, சோளம், உளுந்து, நிலக்கடலை ஆகியவற்றை விதைப்பார்கள். கடந்த  இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாமல் வறட்சி  நிலவியதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, அயன்வடமலாபுரம் கிராமத்து விவசாயிகள் மழைக்கஞ்சி காய்ச்சி வழிபாடு செய்தனர்.

mazai kanji vazipadu

இதுகுறித்து, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம். ‘’ 'ஆடிப் பட்டம் தேடி விதை'னு பழமொழி இருக்கு. ஆனா, மழை இப்போது பருவம் மாறிப் பெய்கிறது, பெய்யாமலும் போய்விடுகிறது. இதனால், விதைப்புக்கான பட்டங்களும் மாறிவிட்டன. போன ரெண்டு வருஷமா மழை இல்லாம, ஊருணிகளும் கண்மாய்களும் வற்றிப் போய்விட்டன. மழை பொய்த்ததனால விவசாயமும் போயிடுச்சு.

நாங்க எல்லோருமே மழையை நம்பி விவசாயம் செய்ற மானாவாரி விவசாயிகள்தான். இந்த வருஷம் ஆடி மாசக் கடைசியிலயும், ஆவணி மாசத் தொடக்கத்துலயும் ஓரளவு பெய்த மழையால ஆவணிப் பட்டத்துலயே நிலக்கடலை, பாசி, உளுந்து ஆகியவற்றை விதைச்சுட்டோம். அதன் ஈரப்பதத்துல ஓரளவு முளைச்சு வந்திருக்கு. சில பகுதிகள்ல விதை முளைக்கவே இல்லை. முளைச்சு வந்த பயிர் நல்லா செழிச்சு வளரணும். அதே நேரம், முளைக்காத விதைகள் முளைச்சு வரணும். மேய்ச்சலில் விடுற ஆடு, மாடுகள் தாகத்துக்காவது ஊருணி, கண்மாய்கள்ல நீர் நிரம்பணும். இதுக்கெல்லாம் ஆதாரமான மழை பெய்யணும்னு சொல்லி, ஊர் மக்கள் ஒவ்வொரு வீட்டுலயும் சிறிதளவு அரிசியை வாங்கி, எங்க ஊரு அம்மன் கோயில் அருகே உள்ள நிலத்துல ஒரு கல்லை நிப்பாட்டி,  மஞ்சள் பூசி, மாலை போட்டு, அதை வருண பகவானாக நினைச்சுக் கஞ்சி காய்ச்சிப் படைச்சு, பெரியவர்களும் குழந்தைகளும் வழிபாடு செஞ்சோம். இப்படிச் செஞ்சா மழை பெய்யும்னு ஒரு நம்பிக்கை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close