Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புஉணர்வுப் பேரணி!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரி மாணவ மாணவிகள், ஆட்சியர் தலைமையில் இன்று டெங்கு விழிப்புஉணர்வுப் பேரணியில் பங்கேற்றதுடன், டெங்கு தடுப்புகுறித்து உறுதியேற்றுக்கொண்டனர்.

டெங்கு விழிப்பு உணர்வு பேரணி

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி, அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட கலைக்கல்லூரியில், இன்று மெகா தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், மாணவ மாணவிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு, நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதுபோலவே, நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமைதோறும் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு தடுப்பு தினம், தொடர்ந்து நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடவுசெய்தார். மேலும், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொகுப்பு மரக்கன்றுகள் நடவுத் திட்டத்தின் கீழ் 5.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 325 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு, அதைப் பராமரிக்கும் பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார். 

நிலவேம்பு

இந்த நிகழ்ச்சியில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் முருகையா பாண்டியன், சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ஆகாஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம் பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி, தமிழ்நாடு வீட்டுவசதி இணையப் பெருந்தலைவர் சக்திவேல் முருகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.செந்தில்குமார், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையாளர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close