Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசின் திட்டங்களை அதிகாரிகளோடு ஆய்வுசெய்த ஆட்சியர்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில், வேளாண்மைத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் லதா ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வில், கௌரிப்பட்டி ஊராட்சியிலுள்ள மேலக்காடு பகுதியில், தேசிய தோட்டக்கலைத்துறையின் சார்பில் நடைபெற்றுவரும் சொட்டு நீர்ப் பாசன முறையில் பயிரிடப்பட்டுள்ள சம்பங்கி மலர்கள் மற்றும் கொய்யாக் கன்று (அடர் நடவு) விவசாயப் பணிகளை நேரில் பார்வையிட்டார். விவசாயிகளிடம், அவர்கள் பெற்ற மகசூல் விவரங்கள், உரங்கள் பயன்படுத்தும் முறையைக் கேட்டறிந்தார்.

மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் விவசாயி பயிரிட்டிருந்த தீவனச் சோளப் பயிரைப் பார்வையிட்டு,அதன் பயன்பாட்டையும் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, திருவேலங்குடிப் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் 2016-2017-ம் ஆண்டுக்கான 2 கறிக்கோழிப் பண்ணை அமைக்கப்பட்டிருப்பதைப் பார்வையிட்டு, கோழிப் பண்ணை அமைத்த விவசாயியிடம் பராமரிப்பு முறை, விற்பனை முறைகளைக் கேட்டறிந்தார்.

 பின்னர், வேளாண்மைத்துறையின்மூலம் பனங்காடி ஊராட்சி இலுப்பக்கோட்டையில், விதைப்பண்ணை அமைக்கும் பணியை ஆய்வு செய்து, விதைப்பண்ணையில் மழைத்தூவான் முறையைப் பயன்படுத்திச் செய்யப்படும் விவசாய முறையைக் கேட்டறிந்து, அதன் பலன்களையும் தண்ணீர் சேமிப்பு முறையையும் கேட்டறிந்து, நல்லமுறையில் விவசாயப் பண்ணையைப் பராமரிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். பருவமழைக் காலம் தொடங்க உள்ளதால், இயற்கை மழையை நல்லமுறையில் சேமித்து, நீர் ஆதாரத்தை உயர்த்த விவசாயிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், காளையார்கோவில் ஊராட்சி, அஞ்சாம்பட்டி கண்மாய் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்டத்தின் சார்பில் கண்மாய் முழுவதுமாக சீரமைக்கும் பணியை ஆய்வுசெய்து, கண்மாய்களில் மழைநீர் நல்லமுறையில் சேமிப்பதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும். கண்மாய் வரத்துக் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்துமாறும் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேலாண்மைத் திட்ட அலுவலருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லதா உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close