Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வழக்காடு மொழி தமிழாக இருக்கட்டும்': இரோம் சர்மிளா உருக்கம்!

இரோம் சர்மிளா

 

'உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை மாற்ற வேண்டும்' என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பல போராட்டங்களை நடத்திவருகின்றனர். சில மாதங்களுக்கு முன், பழங்காநத்தம் பகுதியில் கடுமையான உண்ணாவிரதப் போராட்டத்தையும் வழக்கறிஞர்கள் நடத்தினர். பல சமூக ஆர்வலர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டம் பல நாள்களுக்குப் பின் கைவிடப்பட்டது. இந்நிலையில், 'தமிழை உயர் நீதிமன்றத்தில் மொழியாக்குவோம்' எனும் தலைப்பில் மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள தனியார் விடுதி ஒன்றில், உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக்குழு  சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றுது.

இதில், இரோம் சர்மிளா கலந்துகொண்டு பேசியதாவது, 'இந்திய நாட்டில் பல மொழி, மதம், கலாசாரம் என வித்யாசங்கள் உள்ளன. மத்திய அரசின் கொள்கையால் ஒரே மொழி,  ஒரே நாடு, ஒரே உணவு என்பது திணிக்கப்படுகிறது. இது பயனளிக்காது. அவரவர் சொந்த மொழியில் வழக்காடும் முறை இருந்தால்தான், சாதரண மனிதர்களும் அவர்கள் நினைப்பதைச் சொல்ல முடியும். மணிப்பூரில் இதுபோல பிரச்னை உள்ளது. அதேபோலத்தான் இங்கும் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் குரல் வெளியே தெரிவதில்லை' என்று தெரவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close