Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சந்திராயன்-2', அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும்: விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சிவன் பேட்டி

' 'சந்திராயன்-2' செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்' என்று விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சிவன் கூறியுள்ளார்.

அவர், நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, 'செயற்கைக்கோளை மீண்டும் மீண்டும் செலுத்தப் பயன்படும் வாகனத்துக்கான முதல் கட்ட சோதனை ஏற்கெனவே வெற்றிபெற்றுள்ளது. இதில், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதற்கான தொழில்நுட்பங்கள் ஆய்வுசெய்யப்பட்டுவருகின்றன. 'சந்திராயன்-2' செயற்கைக்கோள், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில், ராக்கெட் செலுத்துவதற்கான செலவு இந்தியாவில் மட்டுமே குறைவு. அதை மேலும் குறைக்க, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில், செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக்கோள் விடப்படும். மீத்தேன் வாயுவுடன் திரவ ஆக்சிஜனைப் பயன்படுத்தி, புதிய ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் முயற்சி  நடைபெற்றுவருகிறது. இதைப் பயன்படுத்துவதன்மூலம் மக்களுக்குக் கேடு விளைவிக்கும் தீங்குகள் பெருமளவு குறையும்' என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close