Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மோடி ஆட்சியில் யாருக்கு பொருளாதார வளர்ச்சி இல்லை?': தமிழிசை விளக்கம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், அஞ்சாநெஞ்சன் அகோரம், பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நேற்று மாலை  நடைபெற்றது.   அதில் கலந்துகொண்டு பேசிய பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்பது உண்மைதான்' என்று பேசியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த அகோரம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அக்கட்சியின் ஒன்றியச்  செயலாளர் மூர்த்தியை வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் கொலைசெய்த வழக்கில் முதல் குற்றவாளி. மேலும், அகோரம் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில்தான் அவர், பி.ஜே.பி-யில் இணைந்திருக்கிறார்.  

அகோரம் பி.ஜே.பி-யில் இணையும் விழாவில் பேசிய தமிழிசை, 'பா.ம.க என்றால், 'பாசமுள்ள மகன் கட்சி' என்று பொருள்.  பா.ஜ.க. என்றால், 'பாசமுள்ள ஜனங்களின் கட்சி' என்று அர்த்தம். எனவே, ஜனங்களை மதிக்கும் கட்சிக்கு அண்ணன் அகோரம் வந்திருப்பதை அன்போடு வரவேற்கிறேன். செல்லூர் ராஜு, ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். இப்தார் நோன்பில் தலைவர்கள் கலந்துகொள்ளலாம். அது மதசார்பின்மை. அதே நேரத்தில், நாட்டுப்பற்றுமிக்க ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்துகொண்டால் அது மதச் சார்பானதா?

மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில்லை என்று ஸ்டாலின், திருமாவளவன் போன்றோர் சொல்கிறார்கள். உண்மைதான்; ஒப்புக்கொள்கிறேன். ஏனென்றால், மோடி ஆட்சியில் ஊழல் செய்ய முடியவில்லை. கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியவில்லை. இதனால், ஸ்டாலினின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. திருமாவளவனின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,, மக்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருக்கிறது. மக்களுக்காகவே ஆட்சி நடத்தும் ஒரே கட்சி பி.ஜே.பி-தான். இந்தியாவின் 13 முதலமைச்சர்கள், 6 துணை முதலமைச்சர்கள், 280 அமைச்சர்கள், 320 எம்.பி-க்கள், 1515 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட மிகப்பெரிய கட்சி பி.ஜே.பி. ஆகும். இதை எந்தக் கொம்பனாலும் அசைக்கமுடியாது' என்றார்.  

இவ்விழாவில், தமிழக பி.ஜே.பி பார்வையாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close