Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'விஜயபாஸ்கர் கூறுவது வேதனையாக உள்ளது' - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழ்நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெங்குக் காய்ச்சலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போவதால், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே போகிறது. இதையொட்டித்தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 'இதுவரை டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தமிழக அளவில் 23 பேர்  இறந்துள்ளனர்' என்று கூறினார். அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் இந்த எண்ணிக்கையைவிட உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சி.பி.ஐ-யின் ஜி.ராமகிருஷ்ணன், 'இறப்பு எண்ணிக்கையை விஜயபாஸ்கர் குறைத்துக் கூறுவது வேதனையாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் நாள்தோறும் டெங்குக் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் உயிர்ப் பலிகளை தமிழக அரசு மூடி மறைக்கிறது. தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளதாக தனியார் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23 பேர்தான் இறந்துள்ளதாக கூறுவது வேதனையாக உள்ளது. டெங்குக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த அணுக்களை பரிசோதனை செய்யும் கருவி ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. அந்தக் கருவியை அனைத்து மருத்துவமனைகளிலும் அமைத்திட வேண்டும். உள்ளாட்சிப்  பிரதிநிதிகள் இல்லாமலேயே கடந்த ஓராண்டாக அது செயல்பட்டு வருகின்றன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை செய்திருப்பார்கள். ஜி.எஸ்.டி, பண மதிப்பு நீக்கத்துக்குப் பின் 5.7 சதவிகித அளவுக்கு பொருளாதாரம் சரிந்துள்ளது.

தமிழகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் பா.ஜ.க வைத்துள்ளது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்  மற்றும் அ.தி.மு.க-வை ரெய்டு பயம் காட்டி கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது பா.ஜ.க. தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகின்றன. ஆனால் அதற்கு மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி ஆட்சியில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் பொருளாதாரக் கொள்கைக்கும் பா.ஜ.க பொருளாதார கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியும்' என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close