Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் ‘’Book on the Wall’’ திட்டம் துவக்கம்

தூத்துக்குடியில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில், ’Book on the wall’ திட்டத்தை ஆட்சியர் வெங்கடேஷ் துவக்கிவைத்தார்.

 

thoothukudi book fair

தூத்துக்குடியில் முதல் புத்தகத்திருவிழா. புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள மாநகராட்சித் திடலில், கடந்த 2-ம் தேதி துவங்கி நடைபெற்றுவருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் பேச்சாளர்களின் கருத்துரைகளும், தினமும் நடைபெற்றுவருகின்றன. இந்தப் புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகும் புத்தகங்களை வாங்கி, மாணவர்களுக்கு இலவசமாக வழங்க விரும்புபவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், ‘புக் ஆன் தி வால்’ என்ற திட்டத்தைத் துவக்கிவைத்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்களை இந்தத் திட்டத்துக்காக வழங்கியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய ஆட்சியர் வெங்கடேஷ், ‘’ தூத்துக்குடியில், முதல் புத்தகக் கண்காட்சி கடந்த 2-ம் தேதி தொடங்கி, சிறப்பாக நடைபெற்றுவருகிறது.  மாணவர்களுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள்,  தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி கண்காட்சியின் நுழைவு வாயிலில் இத்திட்டத்துக்கென வைக்கப்பட்டுள்ள கூண்டில் போடலாம். புத்தகத்திருவிழாவின் கடைசி நாளான 11-ம் தேதி வரை இதில் சேகரிக்கப்படும் புத்தகங்கள், மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நூலகங்களுக்கும், மாணவ, மாணவியரின் விடுதிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. எனவே, புத்தகங்களை வழங்குபவர்கள்,  மாணவர்களின் கல்வி அறிவையும் வாசிக்கும் திறனையும் வளர்த்திட உதவ வேண்டும்’’ என்றார்.

மாவட்ட எஸ்.பி., மகேந்திரன்,  மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் பயிற்சி சார் ஆட்சியர் சரவணன் ஆகியோரும் புத்தகங்களை வாங்கி கூண்டுக்குள் செலுத்தினர். பொதுமக்களும் தங்கள் பங்கிற்கு புத்தகங்களை இத்திட்டத்துக்காகச் செலுத்திவருகின்றனர்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close