Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்தில் குதித்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி மாணவர்கள்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கலைக்கல்லூரி, மதுரை அவுட் போஸ்ட்டில் அமைந்துள்ளது. இங்கு, பயிலும் மாணவர்கள், புதிய மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று கல்லூரி முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கு, மாணவர்களை மிக இழிவாகவும் ஆபாசமாகவும் முதல்வர் திட்டியதாக மாணவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இன்று காலை கல்லூரி வளாகத்துக்குள் வகுப்புகளைப் புறக்கணித்து, அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

காமராசர்பல்கலை

அது மட்டுமல்லாமல், கல்லூரிக்குள் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் ஏதுமில்லை என்றும், பலமுறை இந்தக் கோரிக்கைகளை வைத்தும் கல்லூரி நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை என்றும், இதை நிறைவேற்றித் தரும்வரை போராடுவோம் என்றனர். பல்வேறு சர்ச்சைகளாலும் புகார்களாலும் காமராஜர் பல்கலைக்கழகம் தன் மதிப்பை இழந்துவருகிறது என்றால், அதன்மூலம் நடத்தப்படும் உறுப்புக் கல்லூரியிலும் பிரச்னைகள் உருவாகிவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close