Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தப்பாட்டக் கலையில் டாக்டர் பட்டம்! அசத்திய மதுரைக்காரர்

ராஜா தப்பாட்டம்

அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ''மதுரையைச் சேர்ந்த பனையூர் ராஜாவுக்கு, தப்பாட்டக் கலைக்கான  டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. கிராமத்துக் கலைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் சமயத்தில், தப்பாட்டக் கலைக்காக டாக்டர் பட்டம் கொடுத்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக, பனையூர் ராஜாவிடம் பேசினோம். ''எனக்கு தப்பாட்டம் என்பது பாரம்பர்யத் தொழில். 34 வருடங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். 2004-ல் கலைவளர்மணி விருதைத் தப்பாட்டக் கலைக்காக வாங்கினேன். மதுரையில் தப்பாட்டக் கலைக்காக முதல் முறையாக விருதுவாங்கியது நான்தான். மேலும், 2006-ல் கலைவேந்தன் விருதையும் 2009-ல் மாவட்ட இளம் கலைஞர் விருதையும் வாங்கினேன். தற்போது அமெரிக்கன் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பாக டாக்டர் பட்டம் வாங்கியுள்ளேன். நூற்றுக்கணக்கான விருதுகளை வாங்கினாலும், அதைத் தாண்டிய சந்தோஷம் தற்போது பெருமை அளிக்கிறது. கடந்தவாரம் சென்னையில் இயல் இசை நாடக அரங்கத்தில் இந்த விருதை எனக்கு அளித்தனர். என்னுடன் சேர்ந்து 10-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வெவ்வேறு கிராமிய விருதுகளை வாங்கினர் .

ராஜா தப்பாட்ட கலை குழு

இந்த டாக்டர் பட்டம் கிடைக்க, தமிழ்நாடு கிராமியக்கலை வளர்ச்சி மையம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. தப்பாட்டத்தில் தாளங்களை முறையாக எனக்கு கற்றுக்கொடுத்தவர், குருநாதர் முனியாண்டி. இன்று வரை மதுரை மற்றும் சுற்றுக்கட்டில் நான் சிறந்து விளங்குவதற்கும் அவர்தான் காரணம். என் தப்பாட்ட கலைக்குழு, 'பருத்திவீரன்' உள்ளிட்ட பல படங்களில் பெயர் எடுத்துள்ளது. பணம் மட்டும் நோக்கமில்லை. அதைத் தாண்டி, தொழிலைக் கடவுகளாக மதித்து எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுத்துவருகிறோம்'' என்றார். .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close