Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பட்டாசுக் கடைகளில் ஆய்வு செய்யக் கோரிய வழக்கில் திருச்சி கலெக்டருக்கு நோட்டீஸ்!

பட்டாசு

தீபாவளி நெருங்க நெருங்க கடைவீதிகளில் வியாபாரம் தூள் கிளப்பும், புத்தாடைகளுக்குப் பின் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் என்பது அலாதியான விசயம். ஆனால், இந்தாண்டு ஜி.எஸ்.டி வரியால் வியாபாரம் நமத்துப்போன பட்டாசாகச் சுருங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருச்சியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் . அந்த மனுவில், "தீபாவளிப் பண்டிகையையொட்டி குறுகிய கால பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வெடிபொருள் கட்டுப்பாட்டு விதிகளைத் திருத்துவது தொடர்பாக மாதிரி விதிகளை உருவாக்க உயர் நீதிமன்றம் ஏப்ரல் மாதத்தில் உத்தரவுப் பிறப்பித்தது. அதில் பள்ளி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தற்காலிகக் கடைகள் அமைய வேண்டும். மேலும் கட்டடங்களுக்குக் குறிப்பிட்ட இடைவெளிகள் உள்ளிட்ட பல பாதுகாப்பு விதிகளைப் பிறப்பித்தது.

இந்நிலையில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய இந்த விதிகளுக்குப் புறம்பாக, திருச்சியில் 87 குறுகிய கால பட்டாசுக் கடைகளுக்கு மாநகரக் காவல் ஆணையர் உரிமம் வழங்கியுள்ளார். இந்தக் கடைகளில் விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக அமைந்துள்ளது. ஆகவே, திருச்சி மாநகர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்துப் பட்டாசுக் கடைகளிலும் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலர், நேரில் ஆய்வு செய்து விதிமீறல் இருப்பின் உரிமத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து, வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலர், திருச்சி மாநகர் காவல் ஆணையர், திருச்சி மாவட்ட ஆட்சியர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்க அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close