Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவசர அழைப்பு! - டெல்லி விரைந்த பன்னீர்செல்வம்

சசிகலா பரோலில் வெளிவந்திருக்கும் சூழலில் தமிழக அரசியலில் சற்று சலசலப்பு உருவாகியிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வர இருந்த இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற விசாரணை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருந்தது. அதை எதிர்ந்து மதுரை உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை மூன்று நீதிபதிகள் தலைமையில் அம்மனு விசாரணைக்கு வந்தபோது, தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல் அம்மனுவை தள்ளுபடி செய்தது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்று விசாரணை நடைபெற இருக்கிறது.


இச்சூழலில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய அவசர அழைப்பு வந்ததாகவும் அதைத் தொடந்து அவசரமாக விமானம் மூலம் டெல்லி விரைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் இந்த அவசர டெல்லி பயணம் மூலம் சத்தமில்லாமல் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவே என்று கிசுகிசுக்கின்றன கட்சியின் பட்சிகள். எது எப்படியோ, சசிகலா பரோலில் வெளியானது, தேர்தல் ஆணையத்தில் இரட்டைஇலைச் சின்னம் தொடர்பான விசாரணை போன்ற அரசியல் பரபரப்பான சூழலில் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு பொது மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதனிடையே பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close