Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கீ' படத்துக்கும் தொல்காப்பியத்துக்கும் சம்பந்தம் இருக்கு! - இயக்குநர் காளீஷ்

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்துக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிக்கும் திரைப்படம் 'கீ'. அறிமுக இயக்குநர் காளீஸ் எடுக்கும் இந்தப் படத்தில் ஜீவா ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி மற்றும் 'காவியத் தலைவன்' படத்தில் நடித்த அனைகா ஷோடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

கீ

வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் டீசரை இன்று வெங்கட் பிரபு வெளியிடுகிறார். படத்தின் அப்டேஸ் பற்றித் தெரிந்துகொள்ள இயக்குநர் காளீஸைத் தொடர்புகொண்டுப் பேசினோம். ''என்னுடைய முதல் படம் 'கீ'. இந்தப் படத்தின் கதையை ஜீவாவிடம் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பாகவே சொன்னேன். அவரும் அப்போதே நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால் படம் தள்ளிப்போனது. இந்தப் படத்தின் கதையைத் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துத் தயாரிப்பாளர்களிடமும் நான் சொல்லியிருக்கிறேன். ஒரு வித்தியாசமான கதை களமாகத்தான் இந்தப் படம் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவுக்கு இருக்கும். ஒரு புளூவேல் கேம்மால் எத்தனைப் பாதிப்புகள் வருகிறதோ, அதேபோல் ஸ்மார்ட் போனால் பலர் அவர்களையும் அறியாமல் எத்தகைய பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதைப் படம் சொல்லும். இது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஹேக்கர் சம்பந்தமான கதை.

ஸ்மார்ட் போன் யார் யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கான படம். ரத்தில் ஹேக்கராகவும் நடித்திருக்கிறார். இந்தக் கதையை ஜீவாவிடம் சொன்ன நாளிலிருந்தே இந்தக் கதையில் நடிக்க ஆர்வம் காட்டினார். ரொம்ப ஜாலியான பையனாகவும் படத்தில் நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜிவுடன் அவரது கோம்போ படத்தில் நன்றாக வந்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போது இவர்கள் கூட்டணி காரணமாகக் கலகலப்பாகயிருக்கும். 

கீ


இந்தப் படம் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரிலீஸாவதுதான் படத்துக்கான வெயிட்டையை அதிகப்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், ஒரு புளூவேல் கேம்யால் எவ்வளவு பிரச்னையை இந்தச் சமுதாயம் சந்தித்திருக்கிறது. இந்தப் படத்தில் புளூவேல் கேம்யைவிடப் பல மடங்குப் பெரிய பிரச்னையை ஒரு விஷயம் எத்தகையப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் காட்டியிருக்கிறேன். அது என்ன விஷயம் என்பது சஸ்பென்ஸ். உங்களை வேறு உலகத்துக்குக் கண்டிப்பாக இந்தப் படம் கூட்டிச் செல்லும். படத்தின் டீசரை வெங்கட்பிரபு சார் முதலில் இணையத்தில் வெளியிட, அடுத்ததாகச் சிறிது இடைவெளியில் செல்வராகவன் மற்றும் சூர்யா இருவரும் டீசரை வெளியிடுவார்கள்'' என்றவரிடம் படத்துக்கு ஏன் 'கீ' எனப் பெயர் கேட்டால், 

கீ

'' 'கீ' என்பது தொல்காப்பிய பெயர். ரொம்ப தேடித்தான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன். ஐ என்பதுக்கு எப்படி அழகுனு பெயர் இருக்கோ, அதே மாதிரி 'கீ' என்ற வார்த்தைக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கோ அதே அளவுக்குத் தீமைகளும் இருக்குனு அர்த்தம். அதே மாதிரி ஆங்கிலத்தில் பார்த்தால் ஒரு என்டர் என்கிற 'கீ'யை அழுத்துவதால் உங்கள் வாழ்க்கையில் என்ன நல்லது நடக்குமோ அதே அளவுக்குக் கெட்டதும் நடக்கும். இரண்டுக்குமான அர்த்தமாக இந்த 'கீ' என்கிறச் சொல் இருக்கும். அதனால்தான் இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்'' என்கிறார் இயக்குநர் காளீஷ்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close