Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

15 வாகனங்கள் புடைசூழத் தமிழகம் வந்தடைந்த சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனைச் சந்திப்பதற்காக பரோலில் வெளியே வந்துள்ளார். 

சசிகலா
 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர், தமிழகம் வரும் சசிகலாவைக் காண தி.நகரில் தினகரன் ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.  பெங்களூரிலிருந்து பிற்பகல் புறப்பட்ட சசிகலா மாலை 4.30 மணிக்கு கிருஷ்ணகிரியை அடைந்தார். சுமார் 15 கார்கள் சசிகலா செல்லும் காருக்கு முன்னும் பின்னும் புடைசூழ்ந்து செல்கின்றன. 

சசிகலா
 

கிருஷ்ணகிரி டோல் கேட் அருகே திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து வணக்கம் சொன்னபடியே கடந்துசென்றுள்ளார் சசிகலா. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கூறுகையில் ‘தினகரன் முகத்தில் இருக்கும் உற்சாகம், சின்னம்மா முகத்தில் இல்லை’ என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close