Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நெல்லிக்காய் மாதிரி மோடி’ - கலகலக்கும் பொன்னம்பலம்

ரஜினி, கமல் முதல் தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் ஹீரோக்கள் வரை பலருடன் வில்லனாக நடித்தவர் நடிகர் பொன்னம்பலம். சினிமாவாயையும் தாண்டி அரசியலிலும் விருப்பம் கொண்ட பொன்னம்பலம் முதலில் அ.தி.மு.க-வில் தன்னை நட்சத்திரப் பேச்சாளராக  இணைத்துக்கொண்டார். 

ponnabalam


ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, பா.ஜ.க-வில் இணைந்த பொன்னம்பலம், பா.ஜ.க-வின் தமிழகத் தலைவர் தமிழிசையை இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து பொன்னம்பலத்துடன் பேசினோம். ''பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாகத்தான் பா.ஜ.க-வில் முதலில் இணைந்தேன். அதன்பிறகு வெளிநாட்டுப் பயணம் காரணமாகச் சென்றுவிட்டேன். அந்த நேரத்தில் தமிழிசையைச் சந்திக்க முடியாமல் இருந்தது. அதனால், இன்று தமிழிசை கட்சி ஆபிஸூக்கு வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவரை சந்தித்தேன். 


நானும் தமிழிசையும் ஒரே தெருவில்தான் வசிக்கிறோம். இருந்தும் அவரை மூன்று மாத காலமாக சந்திக்கவில்லை. அதனால் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். இந்தச் சந்திப்பின்போது நலவிசாரிப்பு தவிர வேற எந்த விஷயத்தைப் பற்றிப் பேசவில்லை என்றவரிடம், 

எந்தக் காரணத்தால் பி.ஜே.பி-யில் இணைந்தீர்கள் என்ற கேள்விக்கு, அம்மாவின் இறப்புக்குப் பிறகு, அ.தி.மு.க சில இடர்ப்பாடுகளால் பிரிந்து இருந்தது. அந்த நேரத்தில்தான் பா.ஜ.க-வில் இணைந்தேன். தமிழ்நாடு ஒரு நல்ல நிலைமைக்கு வர வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசின் ஆதரவு முழுவதும் தேவை. அப்போதுதான் நல்ல நிலைமைக்கு தமிழ்நாடு வரமுடியும். 


அம்மாவுக்குப் பிரதமராக இருக்கக்கூடிய தகுதி இருக்குனு நம்ம நிரூபித்துவிட்டோம். வெளிநாடுகளைப் பொறுத்தவரை, நம்ம நாடு முன்னேற்றப் பாதையில் இருக்கிறது என்பது உண்மையான விஷயம் என்றவரிடம், 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் யாரும் மோடி ஆட்சியில் முன்னேற்றம் உள்ளதாக ஏற்றுக்கொள்ளவில்லையே என்றால், அப்படியா நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டில் யாரும் பா.ஜ.க-வை எதிர்க்கவில்லை. பத்தில் ஒருவர் வேண்டுமானால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பா.ஜ.க-வை மக்கள் விரும்புகிறார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியடைய மோடி காரணமாகயிருக்கிறார். 

நெல்லிக்காய் முதலில் சாப்பிடும்போது எப்படிக் கசக்கும் அப்புறம்தான் இனிக்கும். அப்படிதான் மோடி ஆட்சியும். முதலில் அவரின் திட்டங்கள் கசக்கச் செய்தாலும் அப்புறம் நல்லதாகத்தான் இருக்கும். ஒரு நாடு ரெடியாகும்போது அப்படித்தான் இருக்கும்’ என்றார் கலகலப்பாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close