Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவையில் சிட்ஃபண்ட் நடத்தி தந்தை மற்றும் மகன் இரண்டரை கோடி ரூபாய் மோசடி

கோவை மாவட்டத்தில் சிட்ஃபண்ட் நடத்தி, தந்தை மற்றும் மகன் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மோசடிசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்கள், சித்து மற்றும் ஜெயப்பிரகாஷ். தந்தை-மகனான இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் 'சூர்ய கணபதி' என்ற பெயரில் சிட்ஃபண்ட் நடத்தியுள்ளனர். 50 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்ச ரூபாய் வரை சீட்டு நடத்தியுள்ளனர். இதில், கோவை கணபதி, ஆவாரம்பாளையம், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பணம் போட்டுள்ளனர்.

சீட்டு முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மனு அளித்தனர். சிட்ஃபண்டில் பணம் போட்ட திருச்செல்வம் என்பவரிடம் பேசினோம்.  "நான் சைக்கிள் கடை வைத்துள்ளேன். 50 ஆயிரம் ரூபாய் சீட்டு இரண்டு போட்டுள்ளேன். 2015-ல் சீட்டு முடிந்தும் தற்போதுவரை பணம் வழங்கவில்லை.

இதே மாதிரி, கோவையில் மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாய் வரை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சித்து மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு 100 கோடி ரூபாய் சொத்து உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டிலும் நிதி நிறுவனம் நடத்தி மோசடிசெய்துள்ளனர். 

நாங்கள் கேரளா சென்று, அவர்களை நேரில் சந்தித்துப் பணம் கேட்டோம். ஆனால், பணம் கொடுக்க முடியாது என்று ஜெயப்பிரகாஷ் கூறினார். மேலும், நாங்கள் தீக்குளிப்போம் எனக் கூறியதற்கு, 'நானே நெருப்பு கொடுக்கிறேன் தீக்குளியுங்கள்' என்று திமிறாகச் சொல்கிறார்'' என்றார் வேதனையுடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close