Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றிய இளங்கோ, மேற்பார்வையாளர் ஈஸ்வரன் ஆகியோர் தற்போது மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், நயினார் கோயில் ஒன்றியத்தில், கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ், இருவரையும் இடைக்காலப் பணி நீக்கம்செய்து மாவட்ட ஆட்சியர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
 

மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் இடைநீக்க உத்தரவை ரத்துசெய்யக் கோரியும், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாநிலப் பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாநிலச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர். காலையில் தொடங்கிய இந்த முற்றுகைப் போராட்டம், மாலை வரை தொடர்ந்து நடந்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close