Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சேலத்தில் இரண்டு நாள்களில் டெங்குவால் 9 பேர் பலி!

சேலம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. டெங்கு பாதிப்பால் இரண்டு நாள்களில் 9 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். ஒரு குழந்தை மூளைச்சாவு அடைந்துள்ளது. இதனால் சேலத்தில் டெங்கு பீதி அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளனர். சேலம் மாவட்டம், மேச்சேரி சொரையனூர் காட்டு வளவைச் சேர்ந்த பழனிசாமியின் 9 வயது மகன், கவி ஆனந்த். மேட்டூரில் 4-ம் வகுப்பு படித்துவந்தார். சிறுவனுக்குத் தொடந்து  இரண்டு நாள்களாக டெங்கு காய்ச்சல் இருந்துள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருந்தும் அந்தச் சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

தமிழக முதல்வர் பழனிசாமி தொகுதியான எடப்பாடியில் மட்டும் இரண்டு பேர் மரணம் அடைந்துள்ளனர். எடப்பாடி பகுதியைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி விஜயனின் மனைவி மகேஸ்வரி, வயது 26. இவருக்குத் தொடர்ந்து  மூன்று நாள்களாக காய்ச்சல் இருந்து வந்ததையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரும் மரணம் அடைந்தார்.

எடப்பாடி உத்தண்டிக்காடு தாவாந்தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் சுவேதா, வயது 14. தொடர் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தச் சிறுமியும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதேபோல, சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த செல்வியின் மகன் சந்தோஷ் என்கின்ற பூபதி, வயது 6. நேற்று டெங்கு காய்ச்சலால் மரணமடைந்தார்.

மேட்டூர் வீரனூரைச் சேர்ந்த ராஜாவின் மகள் வினித்ரா வயது 19. இவர் சேலம் அரசு  மருத்துவமனையில் 2-ம் ஆண்டு லேப் டெக்னீஷியனாகப் பயிற்சிபெற்று வந்தார். தொடந்து இவருக்கு காய்ச்சல் இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசனின் 8 வயது மகள் சுபஶ்ரீ, டெங்கு காய்ச்சலால் சேலம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அவரும் மரணமடைந்தார்.  

நாமக்கல் டவுன் மஜித் தெருவைச் சேர்ந்தவர் ஷகிலாவின் 9 வயது மகள் பல்ஹிஸ்பானு. தொடர் காய்ச்சல் காரணமாக நாமக்கல்லில் சிகிச்சைபெற்றுவந்தார். நேற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று, மருத்துவர்கள் பல்ஹிஸ்பானு மூளைச்சாவு அடைந்துவிட்டதாகத் தெரிவித்ததை அடுத்து, குடும்பத்தினரும் உறவினர்களும் 'சரியான சிகிச்சை அளிக்காத காரணத்தால், மோசமான நிலைமைக்கு என் குழந்தை தள்ளப்பட்டிருக்கிறார்' என்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close