Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தில் மனு!

 

அக்டோபர் 8-ம் தேதி, மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக, ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது . அதை, அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கிவைப்பார் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது . பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின், 'நான் இதில் பங்கேற்பேன் என அவர்களிடம் சொல்லவில்லை. என்னைக் கேட்காமல் பத்திரிகையில் பெயரைப் போட்டுள்ளார்கள்' என முற்றிலுமாக மறுத்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் செல்லூர் ராஜு. இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த விவகாரம்குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கிருஷ்ணன், மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில், 'விஜயதசமி மற்றும் ஆர் .எஸ்.எஸ் அமைப்பு தினத்தை முன்னிட்டு, ஊர்வலமாகச் செல்லவும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தோம். அண்ணா நகர், காவல் உதவி ஆணையர் இதற்கான அனுமதியை மறுத்து நேற்று உத்தரவிட்டுள்ளார். எனவே, அமைதியான முறையில் நடைபெறும் கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், 'ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கும் பகுதியில், அதிக மருத்துவமனைகள் உள்ளன. பேண்ட் வாத்தியத்துடன் அவர்கள் செல்வதாகத் திட்டமிட்டுள்ளனர். எனவே, நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாவர். ஆகவே, அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது' என்று கூறினர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், மதுரை மாநகரக் காவல்துறை துணை ஆணையருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவெடுக்கவும், அதை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டும் வழக்கை வருகி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சுந்தர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close