Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவமனையில் நாளை நடராசனைப் பார்க்கச் செல்கிறார் சசிகலா: தினகரன் பேட்டி

Chennai: 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராசனை சந்திப்பதற்காக பரோலில்  வந்துள்ளார். பரோலில் வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின்  வீட்டுக்கு வந்தடைந்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 233 நாள்கள் சிறைவாசத்துக்குப் பின்னர், தமிழகம் வந்த  சசிகலாவைக் காண, தியாகராய நகரில் அவரின் ஆதரவு அ.தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

தி.நகர் வந்த சசிகலா

சசிகலா தி.நகருக்கு வந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், 'சசிகலா போயஸ் கார்டனில்கூட தங்கிக் கொள்ளலாம் என்று கர்நாடக சிறைத்துறை அனுமதித்தது. நீதிமன்றத்தின்மூலம் நீதி கிடைத்து, திறமையில்லாத இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். தமிழக அரசின் நிபந்தனைகளால் சசிகலாவுக்கு 5 நாள்கள் மட்டுமே பரோல் கிடைத்தது' என்று கூறியவர், 'நாளை காலை 11 மணி அளவில் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராசனை, சசிகலா பார்க்கச் செல்கிறார்' என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close