Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கணவனோடு சேர்த்து வைக்கக்கோரி மின்சார வாரிய அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலில், மகனின் கல்விச் செலவுக்காகப் பணம் கேட்ட மனைவியை சக நண்பர்களைவைத்துத் துன்புறுத்திய கணவன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மின்சாரவாரிய அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்தினார். 

கன்னியாகுமரி  மாவட்டம் குழித்துறையைச் சேர்ந்தவர், ஜெபசிங்ராஜன். இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு, ஆஸ்ட்லின் என்ற மகன் உள்ளார். ஜெபசிங்ராஜன், நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் ரீடிங் அதிகாரியாக வேலைபார்த்துவருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது தனித்தனியாக வசித்துவருகின்றனர். ''ஜெபசிங்ராஜன், என்னைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வசித்துவருகிறார். எனக்கும் மகனின் கல்விச் செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை. பணம் கேட்டால் என்னை மிரட்டுகிறார். சக நண்பர்களைவைத்துத் துன்புறுத்துகிறார். நான், என் கணவனோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்ற மேகலா, நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். ஏற்கெனவே, ஈத்தாமொழி மின்சார வாரிய அலுவலகத்தில் இதுபோல தர்ணாவில் ஈடுபட்டார். தற்போது, பார்வதிபுரம் மின்சார வாரிய அலுவலகத்தில் மேகலா திடீர் தர்ணா போராட்டம் நடத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close