Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் பரவலாக மழை..!

சென்னையில், இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. 


கடந்த வருடம் தென்மேற்குப் பருவமழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் வறட்சி காணப்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சராசரி அளவைவிட 38 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் இன்று அதிகாலையிலையே சென்னை புறநகர்ப் பகுதிகளான கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close