Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாஸ்திரியாகி 25 ஆண்டுகள்...சிறுநீரகத்தை தானம்செய்த சகோதரி!

ன்னியாஸ்திரியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, கன்னியாஸ்திரி ஒருவர் தன் சிறுநீரகத்தைத் தானம்செய்துள்ளார்.

சிறுநீரகத்தை தானம் செய்த கன்னியாஸ்திரி

படம்: மாத்ருபூமி

இல்லற வாழ்க்கையில் மணி விழா கொண்டாடுவதுபோல, சகோதரி ஜோஸ் ஆன்டோ துறவறம் ஏற்று 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, நல்ல காரியம் செய்ய நினைத்தார். துறவற வாழ்க்கையில் தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில், சிறுநீரகம் ஒன்றை தானம் செய்துள்ளார் ஜோஸ் ஆன்டோ.

ஆலப்புழை அருகே, இரிஞ்சலக்குடாவில் சைக்கிள் கடை வைத்திருந்த திலகன் என்பவர், இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டுவந்தார். ஏழையான அவரால் பணம் கொடுத்து சிறுநீரகம் பெற முடியாத நிலை. திலகனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்கள் அவருக்குப் பொருந்தவில்லை. சைக்கிள் கடையையும் நடத்த முடியாத நிலையில், அவரின் குடும்பம் ஏழ்மையில் வாடியது. 

திலகனின் நிலையை அறிந்த சகோதரி ஜோஸ் ஆன்டோ, தன் சிறுநீரகத்தை அவருக்குத் தானமாக வழங்க முன்வந்தார். ஜோஸ் ஆன்டோவின் சிறுநீரகம், திலகனுக்குப் பொருத்தப்படவிருக்கிறது. தனக்கு சிறுநீரகம் தானம் வழங்க முன்வந்த சகோதரி ஜோஸ் ஆன்டோவுக்கு, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் திலகன். 

ஆலப்புழாவைச் சேர்ந்த ஜோஸ் ஆன்டோ, டாக்டர் பட்டம் பெற்று, இரிஞ்சலக்குடாவில் உள்ள புனித ஜோசப்ஸ் கல்லூரியில் இந்தி ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். பல்வேறு சமூகப் பணியாற்றி, அந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close