Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``இட ஒதுக்கீடு வேண்டாம்... பட்டியலைவிட்டு வெளியேறுகிறோம்!'' - கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி!

தேவேந்திர குல வேளாளர் சாதியைப் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என 'புதிய தமிழகம்' கட்சியினர் நேற்று (6-10-2017) சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடத்தினார்கள். 

கிருஷ்ணசாமி மாநாடு

'பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு' என்ற மாநாடு 'புதிய தமிழகம்' கட்சித் தலைவர் கே.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். 'பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், வாதிரியார், தேவேந்திரகுலத்தார் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் சாதிகள் அனைத்துமே தேவேந்திர குல வேளாளர் இனத்தைக் குறிப்பதே ஆகும். அதனால், இந்தச் சாதிகள் அனைத்தையும் தேவந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க வேண்டும். இதனால் கிடைக்கும் இடஒதுக்கீடு சலுகைகளே வேண்டாம் என்பதே மாநாட்டின் நோக்கம்.

மாநாட்டில் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "பட்டியல் வெளியேற்றம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு என்பது அரசியல் கோரிக்கை அல்ல. இம்மண்ணின் மூத்த வேளாண்குடி மக்களின் உரிமைக்குரல். பட்டியலிலிருந்து வெளியேற்றம் என்ற இந்தக் கோரிக்கையை கல்நெஞ்சக்காரர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது" என்றார். மேலும், அவர் பட்டியல் நீக்கம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் அடையாள மீட்பு ஏற்படும் வரை மிகப்பெரிய போராட்டமும் செய்வோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close