Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடராசனை நேரில் சந்தித்து உருகிய சசிகலா!

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராசனை, அவரது மனைவி சசிகலா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சசிகலாவின் கணவர் நடராசன், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவரும் நடராசனுக்கு, கடந்த 4-ம் தேதி உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்துவருகிறார். 

இந்த நிலையில், கணவர் நடராசனைப் பார்க்க பரோல் கேட்டு, கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்தார் சசிகலா. அவரது மனுவைப் பரிசீலனைசெய்த அதிகாரிகள், ஐந்து நாள்கள் பரோல் வழங்கினர். இதைத் தொடர்ந்து, நேற்றே சிறையிலிருந்து கார் மூலம் சென்னை வந்தார் சசிகலா. தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியுள்ளார். இன்று காலை, கணவர் நடராசனைப் பார்க்க பலத்த பாதுகாப்புடன் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நடராசனைச் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வெளியில் இருக்க வேண்டும் என்று சசிகலாவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவர்களிடம் கணவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த சசிகலா, 2 மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து காரில் தி.நகர் புறப்பட்டுச் சென்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close