Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெங்கு விழிப்புஉணர்வுக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கிரண்பேடி!

புதுச்சேரியில், டெங்கு குறித்த விழிப்புஉணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆளுநர் மாளிகையிலிருந்து  நடைப்பயணம் மேற்கொண்டார். 

கிரண்பேடி

டெங்கு காய்ச்சல் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்து மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் நிலவிவருகிறது. புதுச்சேரியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக மாநில அரசு எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று கிரண்பேடி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

கிரண்பேடி

இந்நிலையில், “டெங்கு காய்ச்சல்குறித்த விழிப்புஉணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஆளுநர் மாளிகையிலிருந்து 5 கி.மீ நடைப்பயணம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதில், யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்று கிரண்பேடி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை 6.30 மணியளவில் அரசு அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஆளுநர் மாளிகையிலிருந்து கிரண்பேடி நடைப்பயணத்தைத் தொடங்கினார். அப்போது, டெங்கு காய்ச்சல்குறித்த விழிப்புஉணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திச்சென்று, பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தினார். கடற்கரைச் சாலை, குருசுகுப்பம், சோலைநகர், முத்தியால்பேட்டை மற்றும் செஞ்சி சாலை வழியாகச் சென்ற அந்த நடைப்பயணப் பேரணி, மீண்டும் ஆளுநர் மாளிகையில் வந்து முடிவடைந்தது. 

புதுச்சேரி

அதேபோல, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி, கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. இந்த விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் முதல்வரின் பாராளுமன்றச் செயலாளர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்புக் கஷாயத்தை வழங்கினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close