Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``மற்றதைப் பேச வேண்டாம்'' - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கால்கோள் விழாவில் பதறிய அமைச்சர்

வருகின்ற 26-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் விழா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில்  நடைபெற்றது. 

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா

திருச்சி மாவட்ட கலெக்டர் இராசாமணி தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, எம்.பி-க்கள் டி.ரத்தினவேல், ப.குமார், ஆர்.பி.மருதராஜா, எம்.எல்.ஏ-க்கள் மணப்பாறை ஆர்.சந்திரசேகர், முசிறி எம்.செல்வராஜ், மண்ணச்சநல்லூர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்ஜோதி, கே.கே.பாலசுப்பிரமணியன், டி.பி.பூனாட்சி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாநகராட்சி நகரப்பொறியாளர் அமுதவள்ளி, கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா, அ.தி.மு.கவைச் சேர்ந்த மலைக்கோட்டை அய்யப்பன், ராஜா, கார்த்திகேயன், பூபதி, முஸ்தபா, மகாலட்சுமி, பாஸ்கர், ஜவகர், ராஜேந்திரன், சகாதேவபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு முன்பாக முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மாலை அணிவித்தபடி அமர, கால்கோள் விழாவுக்கான மந்திரங்கள் முழங்கப்பட்டன. இறுதியாகப் பந்தல் அமைக்கும்பணி கால்கோளை நட்டுவைத்ததுடன், இந்த விழாவுக்கான விழிப்புஉணர்வு ராட்சத பலூன்களை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் பறக்க வைத்தார்கள்.

இறுதியாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அம்மாவின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும், தமிழக முதல்வர் விழாவினை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் 26-ம் தேதி  திருச்சி ஜீ கார்னர் மைதானத்தில் எம்.ஜி.ஆர் அநூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மின்னணு விளம்பரத்திரையின் மூலம்  எம்.ஜி.ஆர்  தத்துவப் பாடல்கள், திரைப்படங்கள், அரசின் சாதனை விளக்க திரைப்படங்கள், சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி ஆகியவை தொடர்ந்து நடைபெறவுள்ளது. தமிழக முதல்வர் முடிவுற்று பணிகளைத் தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்கள்.

இவ்விழாவில் தமிழக முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர் பெருமக்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏராளாமான பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்தவிழாவில் சுமார் 2 இலட்சம் பேர் கலந்துகொள்ள  இருக்கின்றனர்” என்றார்.

தொடர்ந்து இரட்டை இலை விவகாரம் உள்ளிட்ட கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் முன்வைக்க, இது ஓர் அற்புதமான விழா, அதற்கான அடிகோள்விழாவில் மற்றதை பேச வேண்டாம் என்றபடி அங்கிருந்து கிளம்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close