Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் முறையாகக் குழந்தைகள் சிறப்புப் பிரிவு -ராமநாதபுரம் காவல் நிலையங்களில் தொடக்கம்

தமிழகத்தில் முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் சார்பு ஆய்வாளர் தலைமையில்  சிறப்புக் குழந்தைகள் நலப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல சிறப்பு பிரிவினை துவக்கி வைத்த காவல் கண்காணிப்பாளர்

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் குழந்தைகள் நலப்பிரிவு எனும் சிறப்புப் பிரிவு இன்று தொடங்கப்பட்டது. அதற்கென தனி அறையைத் திறந்து வைத்தும், அதில் சார்பு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான பெயர்ப்பலகை மற்றும் சட்டப்புத்தகம் ஆகியனவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர். ஓம்பிரகாஷ் மீனா வழங்கினார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 42 காவல் நிலையங்களிலும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு எனத் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.  தமிழகத்திலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில்தான்  இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் நலப் பிரிவுக்கென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சார்பு ஆய்வாளர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துக்கு முரண்பட்ட குழந்தைகள் இங்கு அவர்களாகவே வந்து அவர்கள் யார் மூலம் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்து சார்பு ஆய்வாளர்களிடம் கூறலாம்.அவர்கள் கூறியதன் அடிப்படையில் குழந்தைகள் நலப்பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் சீருடை இல்லாமல் அவர்கள் பயந்து விடாதபடி விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

சார்பு ஆய்வாளர்களைத் தவிர இரு சமூக சேவகர்களும் இந்தப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக சேவகர்களான மகேஸ்வரன், பூங்கொடி ஆகிய இருவரும் குழந்தைகள் நலப்பிரிவு சார்பு ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த பயிற்சியும், அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்குவார்கள்'' எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி.இன்பமதி, சிறார்கள் நலப்பிரிவு டி.எஸ்.பி.காந்திமதிநாதன்,ராமநாதபுரம் டி.எஸ்.பி.நடராஜன், காவல் ஆய்வாளர்கள் நாகசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி துரைமுருகன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close