Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`சசிகலா, தனது ஆளுமையைப் பயன்படுத்த வேண்டும்’ - தனியரசு பேட்டி

பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவைச் சந்தித்து இரு அணிகள் இணைவது குறித்து பேசப்போவதாக  கொங்கு இளைஞர் பேரவை பொதுச் செயலாளர் தனியரசு தெரிவித்துள்ளார். இன்னமும் எந்த அணிக்குத் தங்களது ஆதரவு என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காமல், நேரம் வரும்போது அதை முடிவு செய்வோம் எனச் சொல்லி வரும் எம்.எல்.ஏ தனியரசுவைத் தொடர்பு கொண்டோம். 

அப்போது அவர், “வரும் 9 -ம் தேதி சென்னை வருகிறேன். அப்போது மருத்துவமனைக்குச் சென்று நடராசன் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளேன். சசிகலாவைச் சந்திப்பதற்கு நான் தயராக உள்ளேன். அதற்கு அவரது பரோல் விதிமுறைகள் அனுமதி அளித்தால் நிச்சயம் சந்தித்து ஆறுதல் கூறுவேன். அந்தச் சந்திப்பில் அ.தி.மு.க-வில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலைகுறித்துப் பேசுவேன். அவர்கள் தங்களின் ஆளுமையைப் பயன்படுத்தி இதைச் சரிசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுவேன். ஆனால், நான் சந்திப்பதால் அவரின் பரோலுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டுவிடக் கூடாது” என்றார்.

இரட்டை இலை யாருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற கேள்விக்கு, “தற்போது தமிழகத்தில் நடப்பதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் தலையீடு இருப்பதாக பொதுமக்கள் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் பன்னீர்செல்வம் - பழனிசாமி அணிக்கு சின்னமும் கட்சியும் கிடைக்க வாய்புள்ளதாகவும் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் இதில் முறையான விவாதம் நடைபெற்று அதன் பிறகு, முடிவு எடுக்க வேண்டும். அன்று 10 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு சின்னத்துக்கு பன்னீர்செல்வம் உரிமை கோரியபோது அதை ஏற்று சின்னத்தை முடக்கியது. தினகரன் பக்கம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறாரகள். இதை எல்லம் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையம்  நடுநிலையோடு செயல்பட்டு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்றவரிடம்,  உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் அணியுடன்தான் கூட்டணியா என்ற கேள்விக்கு, “அப்படி எதுவும் இல்லை. அதை அந்தச் சமயத்தில்தான் முடிவு செய்வோம். நாங்கள் இருக்கும் அணி தமிழகத்தில் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும்” என்றார்.

கமல் அரசியல் கட்சித் தொடங்க உள்ளது பற்றிய கேள்விக்கு, “ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கட்சித் தொடங்க, அரசியலில் ஈடுபட முழு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் கமல், ரஜினி என யார் வேண்டுமென்றாலும் அரசியலில் ஈடுபடலாம். ஆனால், சிஸ்டம் சரி இல்லை என்பது போன்ற கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சிஸ்டம் சரியில்லாமல் அவர்கள் இருவரால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது. கலைத்துறையில் கமலின் திறமையை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஆனால், ட்விட்டரில் மட்டும் ஆட்சி நடத்திவிட முடியாது. 

திரைப்படத்தில் வருவதுபோல் ஊழலை ஒழித்துவிடுவேன் என்பது எல்லாம் பொய். டெல்லியில் கெஜ்ரிவாலால்கூட முடியவில்லை. அவரது அமைச்சரவையில் சிலரது மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அரசியல் என்பது திரைப்படம் போல் எழுதிவைத்து நடிப்பது அல்ல. அடிப்படையில் அரசியலுக்கு ரஜினி மற்றும் கமல் தகுதி அற்றவர்கள்தாம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close