Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”இலங்கையின் திமிருக்கு இந்திய அரசுதான் காரணம்” புதுச்சேரியில் வெடித்த திருமுருகன் காந்தி

ஆளுநர்கள் இருக்கின்றனர். மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் வளரும்” என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்திருக்கிறார்.

திருமுருகன் காந்தி

புதுச்சேரியில் மே 17 இயக்கத்தின் தமிழின உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் சுதேசி மில் எதிரில் மாலை 7 மணிக்குத் தொடங்கியது. கூட்டம் தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “பாஜகவின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து தமிழகம் முழுவதும் மே 17 இயக்கம் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. புதுச்சேரியில் இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்தது.  அதற்குக் காரணம் பாஜகவின் அழுத்தமும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தலையீடும்தான். எங்களின் பொதுக்கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று கிரண்பேடி மூலம் பாஜகவினர் முயற்சி செய்தனர். அதை வெற்றிகரமாக முறியடித்துவிட்டுத்தான் இப்போது கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். எங்கள்மீது போடப்படும் பொய் வழக்குகளுக்காக நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். எங்களின் பிரசார இயக்கமும் ஒருபோதும் ஓயாது. இதுவரை எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 150 பேர்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அதற்காக ஒருபோதும் நாங்கள் பயப்பட மாட்டோம். பொய் வழக்கைப் போடுபவர்கள் நிச்சயம் ஆட்சியை இழப்பார்கள்.

 

மக்களின் துணையோடு தமிழர் விரோத பாஜகவை வீழ்த்துவோம். மக்கள் அதிகாரத்தை இழந்துள்ள பாஜக அரசு ஆட்சி அதிகாரத்தையும் விரைவில் இழக்கும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும். தமிழன மக்களுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகின்றது. புதுச்சேரியிலும் தமிழகத்திலும் ஜனநாயகத்திற்கு விரோதமான ஆளுநர்கள் இருக்கின்றனர். மாநிலங்களில் ஆளுநர்களை நியமிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.  அப்போதுதான் ஜனநாயகம் வளரும். தமிழகத்திலிருந்து ஐ.நா கவுன்சிலுக்குச் சென்ற வைகோமீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்திய அரசு அதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? தமிழர்களுக்கு ஐநாவில் கூட பாதுகாப்பு கிடையாது. இலங்கையின் திமிருக்கு இந்திய அரசின் ஆதரவுதான் காரணம். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்பட்டும் அவர்களைச் சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதமான செயல். அவர்களை நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும்” என்று பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close