Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணி நிரந்தரம், தீபாவளி போனஸ் கோரி மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

பணி நிரந்தரம் மற்றும் தீபாவளி போனஸ் ஆகியவற்றை வலியுறுத்தி தமிழக மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு ஒப்பந்த முறையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம்  செய்யக்கோரி ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பணி நிரந்தரம், போனஸ் கோரி மின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
 

இந்நிலையில் ராமநாதபுரத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்தக் கோரியும், 2017-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ராமசந்திரபாபு தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் ஜான்செளந்தரராஜ் தொடங்கிவைத்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் குருவேல் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் சங்க நிர்வாகிகள் முருகன், குமார், ஆரோக்கியம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close