Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா மீதான திடீர் விசுவாசம் - கட்சியில் கலகத்தை ஏற்படுத்திய செல்லூர் ராஜு

எடப்பாடி அரசு மீதான அதிருப்தியையும், சசிகலா மீதான விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைச்சர் செல்லூர்ராஜு அதிரடியாக பேசியுள்ளது, அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையில் ரோட்டரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் செல்லூர்ராஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தற்போது எங்கள் கட்சியில் நிலவும் பிரச்னைகளை எடுத்துரைக்க முடியாது. காரணம் நான் அமைச்சர். ஆட்சியை வழி நடத்தும் துணை முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் கட்சியையும் வழி நடத்துகிறார்கள். நான் முதலமைச்சருக்கு கீழ் பணி செய்யும் அமைச்சர்தான். எனக்குள்ளும் கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் உண்டு. இப்போது அதை நான் வெளிபடுத்த முடியாது. அனைத்தையும் மனதுக்குள்  அடக்கி வைத்துள்ளேன். அம்மாவின் உண்மையான தொண்டன் நான்.

 

அதிமுக
 

சின்னம்மா அவர்கள், மிகச் சிறப்பான முறையில் அம்மாவின் அரசு நிலையாக அமைய பெரும்பாடுபட்டவர். அதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. நன்றி மறக்காதவன் நான். என்னுடைய கருத்துகள் முதல்வர் எடப்பாடி, துணைமுதல்வர் ஓ.பி.எஸ். எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், ஆட்சிக்குப் பாதகமாக ஆகிவிடக்கூடாது. எங்கள் ஒரே எதிரி தி.மு.க.தான். எதிர்க்கட்சித் தலைவர்கள் சொல்லக்கூடிய குற்றங்களுக்குப் பதில் சொல்ல தயராக உள்ளேன். டெங்கு எவ்வளவு வேகமாக பரவுகிறதோ அதைத் தடுக்க அதற்கு மேலான வேகத்தில் சுகாரத்துறை அமைச்சரும், தமிழக அரசும்  மிக வேகமாக செயல்படுகிறார்கள். டெங்குவைவிட மோசமானது தி.மு.க.'' என்றார்.

செல்லூர் ராஜுவைப்போல் சசிகலா,  ஆதரவு நிலைப்பாட்டுடன் பலரும் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட வாய்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close