Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டெங்குவுக்கு இதுவரையில் 85 பேர் பலி': சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவிப்பு

’தமிழகத்தில் டெங்கு பாதிப்பால் இதுவரையில் 85 பேர் பலியாகியுள்ளனர்’ என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு

’டெங்கு’ என்ற ஒரு சொல் இன்று தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் பரவி வரும் டெங்கு நோயால் பலர் பலியாகியுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 2000 பேர் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோரை தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செயலாளர், “தமிழகத்தில் மட்டும் இதுவரையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு 85 பேர் பலியாகியுள்ளனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் தமிழகமெங்கும் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close