Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஆட்சியை கலைக்க முடியாது’: முதல்வர் திட்டவட்டம்!

’ஜெயலலிதா ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடங்கவிழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் காக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எத்தனைக் கூக்குரலிட்டாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது” என்றார்.

 

மேலும், ’டெங்கு’ என்ற ஒரு சொல் இன்று தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் பரவி வரும் டெங்கு நோயால் பலர் பலியாகியுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 2000 பேர் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில்,”காய்ச்சல் வந்தால் உடனே மக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். அப்போது தான் குணமடைய முடியும். மேலும், மக்கள் அனைவரும் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close