Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி பழங்களை உலரவைத்து விற்பனை செய்யலாம்..! உதவும் ‘கோவெஸ்ட்ரோ’ தொழில்நுட்பம்

Chennai: 

தமிழ்நாடு மாம்பழ விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கில், ‘கோவெஸ்ட்ரோ’-வின் தொழில்நுட்பத்தைத் தழுவிய க்ரீன் ஹவுஸ் சோலார் உலர்த்திகளை நிறுவிப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். 

கோவெஸ்ட்ரோ நிறுவனம், சென்னையைச் சேர்ந்த விவுன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாம்பழம் பண்ணையை கொண்டிருக்கும் 70 விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான உதவியை வழங்கியிருக்கிறது. மாம்பழப் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகள் ‘சூரிய சக்தியினால்’ செயல்படும் உலர்த்திகளை வாங்கியிருக்கிறார்கள். சூரிய சக்தியினால் இயங்கும் உலர்த்திகளில் பழங்கள் உலர வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் உலர்ப்பழங்களை எப்போதுமே கொடுக்க முடியும். காய்கறிகள் உற்பத்தியில் மாபெரும் உற்பத்தி நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தியாவின் இடமானது, காய்கறிகளின் தரவரிசைப் பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு இல்லை. இந்தியா வருடம் ஒன்றிற்கு 220 மில்லியன் டன் அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது. ஆனால் அந்த உற்பத்தியில் 30 சதவிகிதம் கூட மக்களைச் சென்று சேர்வதில்லை. இதற்குக் காரணம், காய்கறிகள் மற்றும் பழங்களை அறுவடைக் காலத்தில் சேமித்து வைக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லாததே இதற்கு முக்கியமான காரணம். இதனால் இவற்றில் பெரும்பாலான காய்கறிகள் கழிவாக வீணாகி விடுகிறது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் ‘கோவெஸ்ட்ரோ’, ‘விவுன்ஸ்’ உடன் இணைந்து ஒன்றிக்கு மேற்பட்ட பழங்களின் பட்டைகளை உலர்த்தும் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் செயல்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எம்சிஐ அக்ரோ இண்டஸ்ட்ரீஸ்-க்கு ஆறு யூனிட்கள் ’க்ரீன் ஹவுஸ் சோலார் ட்ரையர்கள்’ வழங்கப்பட்டு இருக்கிறது. 

கோவெஸ்ட்ரோ தொழில்நுட்பம்

கோவெஸ்ட்ரோ நிறுவனம், ’பழப் பூங்காவை’ உருவாக்க முயற்சி எடுத்து வருகிறது. வானிலை காரணமாகவோ, சந்தையில் தேக்க சூழ்நிலைகளினாலோ பழங்கள் வீணாவதைக் குறைக்கும் வகையில் இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. தற்போது பழங்கள் வீணாவதைத் சமாளிக்க, குளிர்பதன கிடங்குகள், உலர்த்திகள் என பலமுறைகளைப் பயன்படுத்தி பதப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இம்முறையில் செய்வதற்கு எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது எரிபொருள்கள் விலையேற்றம், எரிபொருள் குறைந்து வருதல் எனப் பல காரணங்கள் இருப்பதால் எளிதில் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், இயற்கையில் கிடைக்கக் கூடிய சோலார் தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டால் விவசாயிகளுக்கு ஏற்படும் செலவுகள் பெரும்பாலும் குறையும். 

"பருவநிலை, சந்தையில் குறைவான தேவை நிலவுதல், சரக்கு வசதி வாய்ப்புகள் மீதான பிரச்னைகள், நீண்டகால கடன் பிரச்னைகள் மற்றும் குறைவான அவகாசமுள்ள வாழ்க்கைக் காலம் ஆகியவை நீண்ட காலமாக விவசாயிகளைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளது. அதற்கு கோவெஸ்ட்ரோ நிறுவன சோலார் உலர்த்திச் சரியான தீர்வாக அமையும். சந்தையில் பழத்தின் பட்டைகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வது மட்டுமல்லாமல், பெண்கள் சுய உதவிக்குழு உள்ளிட்டோர்க்குத் தொழில்முனைவோராக உயர்த்த இந்நிறுவனம் முன்வருவதால், நாங்கள் உலர்த்திகளைப் பயன்படுத்த விரும்புகிறோம்" என்கிறார் விவசாயிகளில் ஒருவரான சத்திய மூர்த்தி. 

கோவெஸ்ட்ரோ தொழில்நுட்பம்

உணவுப் பாதுகாப்பிற்கான நிலையான வழிமுறைகள் இன்றையச் சூழ்நிலையில் இந்தியாவிற்கு மிகவும் அவசியமான தேவையாக இருக்கின்றன. அந்த வகையில் நிலையாக நீடித்துப் புதுப்பிக்கத்தகுந்த வழிமுறையாக அமைந்திருக்கிறது ’சூரிய ஆற்றல் மூலமான உலர்த்தல்’. இதன் சிறப்பம்சங்கள் நமக்கு நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்திருக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட ஆற்றலின் பயன்பாட்டிற்கான இந்த முயற்சியின் மூலம் விவசாய மக்கள் நிலையான வணிகத்தை உருவாக்கவும், அதன் மூலம் இந்தியாவில் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பைக் கொடுக்கவும் முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close