Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டெங்குவால் இறப்பு என தலைப்புச் செய்தி போட்டு பயமுறுத்த வேண்டாம்’- அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை

டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பார்வையிட வந்த  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளர்களிடம் பேசும்போது,

‘’தமிழ்நாடு முழுவதும் பரவி வரும் மர்மக் காய்ச்சல் மற்றும் டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பாக பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் டெங்கு உள்ளது. தொடர்ந்து முதலமைச்சரின் அறுவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆய்வுமேற்கொண்டு வருகிறேன். மருத்துவமனைகளில் கூடுதலாக செவிலியர்கள், ரத்தப்பரிசோதகர்கள் எடுத்து வருகிறோம், காய்ச்சல் என வந்தாலே குழந்தைகள் ஏழு நாள்களும், பெரி்வர்கள் ஐந்து நாள்கள் தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.

விஜயபாஸ்கர்

ஊடகங்கள், டெங்குவால் இறப்பு என்று தலைப்புச் செய்தி போட்டு மக்களை பயமுறுத்தக் கூடாது. பெட் வசதியில்லாத தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவேண்டும். கண்டுபிடிக்க முடியாத நிலையில் எந்தக் காய்ச்சலும் இப்போது இல்லை. சுகாதாரத்துறை அமைச்சகம் விதிக்கப்பட்டிருக்கிற ஆணைகளின்படி அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்குக் கொசுவை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் யார் நடந்தாலும் சிறைத் தண்டனை உண்டு.  இதில் அரசு அதிகாரிகளும் விதிவிலக்கு அல்ல. இந்த ஆண்டில் 770 போலி மருத்துவர்கள் கைதுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. போலி மருத்துவர்கள் எங்கிருந்தாலும் கைதுசெய்வோம்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close