Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' - முத்தரசன் அறிக்கை!

Chennai: 

'தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

முத்தரசன்

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கேரள மாநிலத்தில் பிராமணர் அல்லாதவர்களையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

குறிப்பாக, ஆறு தலித்துகள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று தெரிவித்தாலும்கூட, இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. சாதிய வேறுபாடுகளும் அதன் விளைவாக வன்முறைகளும் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் ஆறு தலித்துகள் உட்பட 36 பேரை பிராமணர்கள் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்திருப்பது, வரவேற்கதக்கது. பாராட்டுக்குரியது, போற்றதலுக்குரியது.

இதை முன் மாதிரியாகக்கொண்டு தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் அறிக்கைவிட்டிருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close