Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடங்கியது இரண்டு நாள் லாரி ஸ்ட்ரைக்! - சரக்குப் போக்குவரத்து முடங்கும் அபாயம்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் தொடங்கியது. 


இன்றும் நாளையும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில், நாடு முழுவதும்  உள்ள 93 லட்சம் லாரிகள், 50 லட்சம் தனியார் பேருந்துகள் ஓடாது என்று கூறப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்புகுறித்து மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், தினசரி விலை நிர்ணயம் செய்யப்படும் முறை மாற்றப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட வேண்டும், நாடு முழுவதும் டீசலுக்கு ஒரே சீரான விலையை நிர்ணயிக்க வேண்டும், சுங்கச் சாவடி கட்டண வசூலை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் சரக்குப் போக்குவரத்து முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால், வியாபாரிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், தமிழகத்தில் 5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், தினசரி 5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.      
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close