Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்பதை நாளைக்குள் (10.09.17) தெரிவிக்க வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இனிமேல் துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கால அவகாசம் தர முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த சந்திரா கிருஷ்ணமூர்த்தியை, கடந்த  2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று கட்டாய விடுப்பில் செல்ல மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்பின், அவர் பணி நீக்கமும் செய்யப்பட்டார். அதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக நிரந்தர துணை வேந்தரை நியமிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, நிரந்தர துணை வேந்தரை நியமிக்கக் கோரி பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு, கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில், நிர்வாக வசதிக்காக இரண்டு வருடங்களாக துணை வேந்தர் நியமிக்காதது வேதனையளிக்கின்றது. இந்த விவகாரத்தில் இனி கால அவகாசம்தரமுடியாது. நாளைக்குள் துணை வேந்தரை நியமிக்க வேண்டும். இல்லையெனில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலருக்கு சம்மன் அனுப்பப்படும்’ என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற உத்தரவுகுறித்து தற்போதுதான் தெரியவந்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close