Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கேளிக்கை வரியைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Chennai: 

ஏற்கெனவே பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசு விதித்துள்ள கேளிக்கை வரி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மேலும் சுமையைக்கொடுத்துள்ளது. கேளிக்கை வரியை நீக்கக்கோரி புதிய படங்களை திரையிடாமல் தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது.

நேற்று நடைபெற்ற நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய விஷால், ''கேளிக்கை வரியால் தமிழ் சினிமா மேலும் பாதிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக சதவிகித வரி செலுத்திவிட்டு தொழில் நடத்தமுடியாது. எனவே, கேளிக்கை வரியை ரத்துசெய்வது தொடர்பான முடிவை அரசு எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

விஷால் - கடம்பூர் ராஜூ

இந்நிலையில், ''திரையரங்க உரிமையாளர்கள்தான் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்கள். அவர்களது கோரிக்கையின் அடிப்படையிலேயே டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் தவிர்த்து, பெரும்பாலான மாநிலங்களில் இந்த கேளிக்கை வரி அமலில் இருக்கிறது. தவிர, தமிழகம்தான் திரைத்துறைக்கு வரிவிலக்கும், மானியம் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கிவருகிறது. எனவே, கேளிக்கை வரியைக் குறைக்கும் வாய்ப்பு இல்லை" என விஷாலின் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருக்கிறார் அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜூ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close