Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடரும்... வழக்கு விசாரணை நவ.2-க்கு ஒத்திவைப்பு

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில், தினகரன் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும் ஆஜராகி வாதாடினர். அப்போது, தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவுக்குப் பதிலளிக்க ஒரு வார காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த தினகரன் தரப்பு வழக்கறிஞர், முதலமைச்சர் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு விளக்கமளிக்க தங்கள் தரப்புக்கும் அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் தினகரன் ஆகியோர், தங்கள் தரப்பு வாதங்களை அக்டோபர் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதுவரை, எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்று தெரிவித்தார்.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close